வட்டி ஓர் உயிர்க்கொல்லி
வட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ.
வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது பாராட்டத்தக்கது. நன்றி; தினத்தந்தி, 4/4/2012.
—-
வஞ்சி ஆர் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு, பதிப்பாசிரியர்-ஆ. பாலதண்டாயுதபாணி, கு.சீனிவாசன், ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை 29, பக். 448, விலை 300ரூ.
ஆர் அமைப்பு நடத்திய கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழின் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், சமய இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பண்பாடு, கலைகள் உட்பட பல்வேறு பொருட்களைப் பற்றிய அறிஞர்களின் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சம கால இலக்கியங்களைப் பற்றிய ஆய்வும் உண்டு. பெண்ணி நோக்கில் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற அம்பையின் சிறுகதையைப் பற்றிய ஆய்வும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் வரலாறு, பண்பாடு, இயற்கைவ்ளம், இலக்கியம் எனப் பரந்த தளத்தில் இந்நூலின் கட்டுரைகள் பல்வேறு அரிய செய்திகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமணி