மரபு
மரபு, இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான், இளம்பிறை பதிப்பகம், பக். 126, விலை 90ரூ.
நூலாசிரியர் எழுதியுள்ள முப்பது உருவக் கதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை பெரும்பாலும் மரபு வழியில் அமைந்துள்ள தத்துவ உருவாக்கம். மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. -சிவா. நன்றி: தினமலர், 18/8/2013
—-
ஜன கண மன, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 60ரூ.
காந்திஜியை கொல்வதற்கு கோட்சே கும்பல் முதலில் முயன்று தோற்றது, பின் வெற்றி பெற்று இறுதியில் காந்திஜியைக் கொன்றது. இன்று எல்லாருக்கும் தெரிந்து ஒன்றுதான் என்றாலும், ஒரு திகில் நாவலுக்குரிய பரபரப்புடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். டக் டக் என்று காட்சிகள் மாறும் சினிமா உத்தியான கட்ஷாட் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. காந்திஜியை ஓரளவாது எதிர்காலச் சந்ததியினர் புரிந்து கொள்ள உதவிடும். -மயில் சிவா. நன்றி: தினமலர், 18/8/2013.
—-
இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், பக். 270, விலை 120ரூ.
ஆதி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட இசையும், கூத்தும், சங்க காலத்தில் எப்படியெல்லாம் விரிவும், வளர்ச்சியும் பெற்றது, மன்னர்கள் எவ்வாறெல்லாம் கலைஞர்களை ஊக்குவித்து, இக்கலைகளை வளர்த்தனர் என்பதை, எல்லாம் முற்காலத்திலிருந்து இக்காலம் வரை விரிவாக ஆராய்ந்து எடுத்துரைக்கும் அரிய நூல் இது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலைச் செட்டியார், மகாகவி பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழிசை வளர ஆற்றிய பணிகள் சிறப்பாக விவரிக்கப் பெற்றுள்ளன. நாடகக் கலை வளர அரும்பணியாற்றியோர் பற்றிய விவரங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஆழமான ஆய்வுச் செய்திகள் தொகுக்கப்பெற்றுள்ளன. -கவுதம நீலாம்பரன் நன்றி: தினமலர், 18/8/2013