கண்ணதாசன் பயணங்கள்
கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்தாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html
கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டு என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தது, விசாவுக்காக அலைந்து, விமானப் பயண அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தாலும், எளிய நடையில் எழுதியிருப்பதால் படிக்கும்போது அலுப்பூட்டவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் மறந்து கூட ஓர் ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்தமாட்டார்கள். இலங்கையில் ஆசிரியரை படிப்பவர் என்று கூறுகிறார்கள், சீதை சிறையிருந்த குன்று இப்போதும் இலங்கையில் இருக்கிறது, கோடைககாலத்தில் அமெரிக்காவில் இரவு 9 மணிக்குத்தான் சூரியன் மறைகிறது என்பன போன்ற தகவல்கள் நூல் முழுவதும் உள்ளன. ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் எல்லைகாந்தி கான் அப்துல் கபார்கானை பார்க்க கவிஞர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போனது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவில் தொழிற்சாலைகளில் ஒவ்வோராண்டும் சிறப்பாக பணிபுரிந்த தொழிலாளர்களின் படங்களை மாட்டுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்நூலைப் படிக்கும்போது நாமே கவிஞருடன் இந்நாடுகளைச் சுற்றிப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. பொருளடக்கம் இல்லாதது ஒன்றுதான் குறை. நன்றி: தினமணி 23/9/2013.
—-
ஸ்ரீலலிதா, கிரி டிரேடிங் ஏஜென்சி, 134, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 300ரூ.
லலிதா என்றால், அனைவரிடமும் அன்பு செலுத்துபவள், லீலைகள் புரிவதில் விருப்பமுள்ளவள், அனைவர் மனதையும் வசப்படுத்துபவள் என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. லலிதாம்பிகைப் பற்றி 1000 நாமாவளிகள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான பொருள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். ராமாயணம் என்றால் வால்மீகியின் ஞாபகம் வரும். மகாபாரதம் என்றால் வியாசர் எனலாம். ஆனால் லலிதா சஹஸ்ரநாமத்தை யார் இயற்றினார் என்று சொல்ல முடியாது. காரணம், அம்பிகை பரமேசுவரியின் ஆணையின்படி, அம்பிகையின் விபூதிகளாக இருக்கும் வாக்தேவதைகள் செய்து கொடுத்ததுதான் லலிதா சஹஸ்ரநாமம் யார் இயற்றினார் என்று சொல்ல முடியாது. காரணம், அம்பிகை பரமேசுவரியின் ஆணையின்படி, அம்பிகையின் விபூதிகளாக இருக்கும் வாக்தேவதைகள் செய்து கொடுத்துதான் லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஐதீகம். விஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர், லலிதாம்பிகையின் பெருமைகளையெல்லாம் அகத்தியருக்குச் சொல்கிறார். பக்தி பரவசமூட்டும் அப்பெருமைகளை டாக்டர் சுதா சேஷய்யன் எளிய தமிழில், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரை வடிவில் ஆக்கித் தந்துள்ளார். நன்றி:தினத்தந்தி, 25/9/2013.