தேவதைகளின் வீடு

தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ. கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் […]

Read more

சிறுவர் கதைக்களஞ்சியம்

சிறுவர் கதைக்களஞ்சியம் (தொகுதி 3,4), மு.ரா. சுந்தரமூர்த்தி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 85+85ரூ. சின்னஞ்சிறுவர்களின் வெள்ளை மனதில் நல்ல நல்ல கருத்துக்களை விதைகளாக விதைத்திருக்கிறார் ஆசிரியர். பெரிய பெரிய தத்துவ நூல்கள், ஞான நூல்களால் புரிய வைக்க முடியாத உயர்ந்த நீதிகளை, தர்மங்களை நியாயங்களை, நெறிமுறைகளை, நியதிகளை, சின்னஞ்சிறு கதைகளாக்கி போதிக்கும் உத்தியை இக்கதைக்களஞ்சியங்கள் வழியாகச் செய்துள்ளார். கதைகளில் மன்னர்கள், வியாபாரிகள், ஞானிகள், வரலாற்றுப் புருஷர்கள், புராண நாயகர்கள், சமகால நிகழ்வுகள் என்று களமாக எடுத்திருப்பது, சலிப்பில்லாமல் […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more