முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 1, விலை 140ரூ.
இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே முள்ளிவாய்ககாலில் தொடங்கும் விடுதலை அரசியல். இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா. செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது. இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது பேசுங்கள் ஆகிய தலைப்புகளில் வெளியான கட்டுரைகள் புத்தகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நூலாகும்.
—-
ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக்நகர், சென்னை 83, விலை 200ரூ.
சிலர் குறி சொல்கிறார்கள். அது பலிக்கிறது. சிலர் பூர்வ ஜென்ம நினைவுகளைக் கூறுகிறார்கள். பரிசோதித்தால் அது உண்மை என்று தெரிகிறது. சிலர், பூர்வஜென்ம நினைவுகளைக் கூறுகிறார்கள். பரிசோதித்தால், அது உண்மை என்று தெரிகிறது. சிலர், இறந்தவர்களுடன் பேசும் சக்தியைப் பெற்றிருக்கிறார்கள். இதுபற்றி எல்லாம், மேல் நாட்டில் ஆராய்ச்சிகள் நடந்து இருக்கின்றன. ஆழ்மனதில் உள்ள அற்புத சக்திகளை பயன்படுத்தவதன் மூலமாகவே இந்த அதிசயங்களைச் செய்ய முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆழ்மனதின் சக்தியை சிலரால் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. பல்வேறு இடங்களில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களும் அவற்றை நிகழ்த்தியவ்ர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தை நூலாசிரியர் என். கணேசன் சுவைபட எழுதியுள்ளார். பாராட்ட வேண்டிய படைப்பு. நன்றி: தினத்தந்தி, 24/4/2013.