நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல், இஸ்லாமிய நிறுவனம், விலை 275ரூ. காலை விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்லித்தருகிறது இஸ்லாம் மார்க்கம். அத்தகைய வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழீகளை பல்வேறு தலைப்புகளில் மவுலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ தொகுத்து தந்துள்ளார். இதை இ.எ.பஸ்லூர் ரஹ்மான் உமரீ அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும், இஸ்லாமிய நிறுவனம், விலை 80ரூ. வரலாற்றில் பொய்யையும், வெறுப்பையும் நிரப்பி திரிக்கப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அத்தகைய செய்திகளில் உள்ள உண்மை நிலையை இந்த நூலில் பேராசிரியர்கள் அருணன், தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மத் ஆகியோர் உரத்துக் கூறியுள்ளனர். அதில் பாபர் மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள உண்மையான தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் உண்மை நிலவரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more

சேகுவாராவின் பொலிவியன் டைரி

சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

வளரிளம் பருவம்

வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ. மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.   —- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ. வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் […]

Read more