பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்
பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ.
ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
திறவுகோல், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, முதல்பாகம் 35ரூ, இரண்டாம் பாகம் 90ரூ.
அரபி மொழி அறியாத மாணவர்கள் அரபி மொழியைத் தாமே சுயமாகக் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த நூலை ஆங்கிலத்தில் டாக்டர் வி.அப்துர்ரஹீம் எழுதியுள்ளார். இதைப் பேராசிரியர் எஸ்.கே.ஹயாத் பாஷா தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தாமே அரபி மொழியைக் கற்றுக்கொள்ள நினைப்போருக்கு இந்த நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.