தேடலில் தெளியும் திசைகள்
தேடலில் தெளியும் திசைகள், வைகறை (தொகுப்பும் பதிப்பும்), பவளவிழாக்குழு வெளியீடு, பக். 272, விலை 20ரூ.
ஞானலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுத்தாளர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இலக்கிய ஆளுமைகள் எழுதிய 255 கடிதங்களின் தொகுப்பு இந்நூல். தஞ்சை பிரகாஷ் தொடங்கி கரிச்சான்குஞ்சு, கவி கா.மு.ஷெரீப், ஏ.கே.செட்டியார், அசோகமித்திரன், கி.அ. சச்சிதானந்தன், சிட்டி என்று பல்வேறு இலக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியர்களுக்கு எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் புத்தகங்களைப் பற்றிய தேடல்களாகவே உள்ளன. இலக்கிய ஆளுமைகளின் உள்ளுணர்வுகளை, சமகால இலக்கியப் போக்கை இக்கடிதங்கள் வெளிப்படுத்தி, இலக்கிய வரலாற்றுக்கான ஆவணமாக மிளிர்கிறது. நன்றி: குமுதம், 21/9/2015.
—-
சைவ சித்தாந்த சாத்திரங்கள், சித்தாந்த பண்டிதர் நெல்லை சி.சு.மணி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விலை பகுதி இரண்டு 225ரூ. பகுதி மூன்று 125ரூ. சிவபெருமானை எந்நாட்டவருக்கும் இறைவனாகவும், முழு முதற் கடவுளாகவும் கொண்டு திகழும் வைச சமயத்தின் தத்துவக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் சாத்திரங்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.