வளரிளம் பருவம்
வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ.
மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.
—-
நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ.
வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை முன் மாதிரிகளாக தொகுத்தளித்திருக்கிறார் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம். பொதுமக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் கொடுத்திருப்பது வழக்காளிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தினத்தந்தி.
—-
நபி (ஸல்) வரலாறு, அதிரை அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ.
அகிலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பட்ட இறைதூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லிலும், செயலிலும் உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்கள். அவர் எங்கு பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் யார்? நபிகளார் மக்களுக்கு எதைப் போதித்தார்கள் என்பன போன்ற செய்திகளை தொடக்கப்பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுத்தாளர் அதிரை அஹ்மத் இனிய தமிழில், எளிய நடையில் எழுதியுள்ளார். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்பதற்காக அழகிய ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தினத்தந்தி.