துரோகம் வெட்கமறியாது
துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், விலை 140ரூ.
சமுதாயத்தின் சகல பகுதி மக்களின் துயரத்தை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் தமிழன் என்றோர் இனம், மெய்யான ஜனநாயகம் என்பது, பார்க்கத் தவறும் கோணம் உட்பட 31 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட நூலாகும். இந்த கட்டுரைகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த அரசியல் திறவு கோலாக உள்ளன. நன்றி: தினத்தந்தி.
—-
கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாசன், சேகர் பதிப்பகம், சென்னை, விலை 350ரூ.
இது ஒரு புதுமையான நூல். புத்தக ஆசிரியர் மு.ஸ்ரீனிவாசன் எழுதிய பல்சுவை கட்டுரைகள், கதைகள், கவிதைகள் ஆகியவை 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளில் பெரும்பாலானவை தலைவர்கள், பிரமுகர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கின்றன. அவற்றில் பயனுள்ள தகவல்கள் நிறைந்துள்ளன. சர்க்கரையம்மாள் என்ற பெண் சித்தர் சென்னையில் வாழ்ந்தார் என்ற புதிய தகவலை ஒரு கட்டுரை விவரிக்கிறது. சிற்பங்கள், சுற்றுலா தலங்கள் முதலியவற்றின் வண்ணப்படங்கள், 24 பக்கங்கள் கொண்ட பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. புதிய முயற்சி. பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி.