முள்வாங்கி

முள்வாங்கி, சொற்கோ கருணாநிதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக். 128, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-259-9.html புதுக்கவிதைகளின் ராஜ்ஜியத்திலும் மரபுக் கவிதைகளை ராஜ நடைபோட வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் கவிதைகளின் தொகுப்பு இது. புதுக்கவிதைகளுக்கான வீச்சை மரபுக் கவிதைக்குள்ளும் கொணர கவிஞர் எடுத்திருக்கும் முயற்சி புதுமை இதயமும் நுரையீரல், சிறுநீரக பாகங்கள் யாவுமே, கருவியாய்க் கிடைக்கட்டும் என்பதில் உள்ள நவீன அறிவியல் கருத்தாக்கம் கவிதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கின்றது. விருத்தம், சந்தம், எண்சீர், கொச்சக்கலிப்பா, பிள்ளைத் தமிழ் கொண்டு மரபுக்கவிதைகளுக்குள் புதுக்கவிதைகளை விதைத்திருக்கிறார் சொற்கோ. நன்றி: குமுதம், 30/7/2014.  

—-

1001 இரவுகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 496, விலை 250ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-2.html ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக சொல்லப்படும் அராபிய இரவுக்கவிதைகளின் தொகுப்பு இவை. பெண்களைத் தவறாக நினைத்து, தினம் ஒரு பெண்ணை மணந்து மறுநாள் விடிந்ததும் அப்பெண்ணைக் கொன்று வந்தான் மன்னன் ஷாரியர். அந்த அநீதியைத் தடுக்க, அமைச்சரின் மகள் மன்னனை மணந்து, இரவில் தினம் ஒரு கதை என்று சொல்ல ஆரம்பித்தாள். அடுத்த கதை கேட்கும் ஆர்வத்தில் அமைச்சர் மகளின் தலை தப்புகிறது. அப்படி அவள் 1001 இரவுகள் சொன்ன கதையே இவை. அரேபிய இரவுச் சூழல்களைத் தவிர்த்துப் பார்த்தால் கதைகள் அனைத்தும் மனித வாழ்க்கை எவ்வளவு உயர்வானது, இன்பமானது என்பதை விளக்கி மக்களை நெறிப்படுத்தக் கூடியனவாக உள்ளன. மரபான நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்கும் பொக்கிஷம் இவை. நன்றி: குமுதம், 30/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *