தீராநதி நேர்காணல்கள்
தீராநதி நேர்காணல்கள், குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 200, விலை 140ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-1.html நேர்காணலை எந்த ஒரு இலக்கிய வகையுடனும் அவ்வளவு எளிதாக சேர்த்துவிட முடியாது. அது ஒரு புதுவகை இலக்கியமுமல்ல, எனென்றால் நேர்காணல் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதோ, உட்படாததோ அன்று. அது ஒரு கட்டற்ற வடிவத்தின் தன்னிச்சையான ஆளுமை வெளிப்பாடு. குமுதம் தீராநதியுல் வெளிவந்த நேர்காணல்களின் தொகுப்பு என்றாலும் இன்றைக்கும் அதன் வீச்சும் அவை பேசும் விஷயமும் பொருத்தமாக இருப்பதை உணரமுடிகிறது. இலக்கியவாதிகளுடனான சந்திப்புகள் என்பதால் மட்டும் இவை சிறப்புப் பெறவில்லை. மொழி ஆளுமை, சொற்செறிவு, புலமை, அறிவாற்றல் என்று நேர்காணல் வெளிப்படுத்தும் அறிவு சார்ந்த, இலக்கியம் சார்ந்த, பல்துறை சார்ந்த பட்டறிவு, படிப்போருக்கும் உணர்த்தப்படுவதால் ஆகச் சிறந்த ஒரு தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. கமல்ஹாசன், பாரதிராஜா, கருணாநிதி, கோவை ஞானி, பா. செயப்பிரகாசம் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களின் நேர்காணலில் வாசகர்கள் கண்டடையும் ஓர் இடம் என்பதால், அது எழுத்துலகில் சமகால நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஓர் களமாக விளங்குவதுதான். ஒரு சிறுகதைக்கான கூறுகள் ஒரு சமூக வரலாற்றுக்கான தரவுகள், சினிமாவுக்கான படைப்பாற்றல்கள் நுண்கலை அறிவுகள், தலித் இலக்கிய முரண்களுக்கான தீர்வுகள், ஆணாதிக்க இலக்கியத் தாக்கங்கள் என்று இந்நூல் பேசாத பொருள் இல்லை. இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இத்தொகுப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். -இரா. மணிகண்டன். நன்றி; குமுதம், 30/7/2014.