வியாசர் அருளிய மகாபாரதம்
வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ.
மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், எந்தக் காலத்துக்கும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய உயர்ந்த கருத்துக்களைப் பேசுவதால் இந்நூல் நிலைத்த தன்மை பெற்றுவிட்டது. நன்றி: தினத்தந்தி, 1/10/2014.
—-
புதுப்புது அனுபவங்கள், சிவசங்கரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
எழுத்தாளர் சிவசங்கரி, எகிப்து, செசல்ஸ், மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று தனது பயண அனுபவங்களை, அவருக்கே உரிய பாணியில் சுவையாகவும், திகிலாகவும், நகைச்சவையாகவும் கூறி இருக்கிறார். அந்த நாடுகளுக்கு செல்ல இருப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி. மற்றவர்களுக்கு இந்த நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த அனுபவம் கிடைக்கும். நன்றி: தினத்தந்தி, 1/10/2014.