வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more

வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. […]

Read more