வடநாட்டு கோயிற்கலைகள்
வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ. கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. […]
Read more