நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி. ஐசக். அருள்தாஸ் வெளியீடு, சென்னை, விலை 130ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-3.html தமிழக போராட்ட வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த தெற்கெல்லைப் போராட்டத்தின் தளகர்த்தர் மார்ஷல் நேசமணி. இவருடைய முழுமையான ஆளுமையை வெளிக்கொணரும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெண்ணடிமைக்கும், சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தொடங்கிய அவரின் சமூகப் பணி, குமரி மாவட்டம் உருவாவதற்கான உணர்வுப் போராட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தமிழக எல்லைக்களை பெரிய போராட்டத்தின் உணர்வுமிக்க நிகழ்வுகளில் முக்கியப் போராளியாகத் திகழ்ந்த நேசமணியின் வாழ்க்கைப் பதிவு விரிவாக இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/10/2014.  

—-

சித்தம் சிவம் சாகசம்,  இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 160ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-8.html தமிழகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் பற்றியும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சித்துக்கள் எந்த அளவுக்கு உண்மையானது என்பது பற்றியும் விறுவிறுப்பான வார்த்தைகளால் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக போகர், கருவூர் சித்தர், திருமூலர் போன்றவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 1/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *