புத்த புனித காவியம்

புத்த புனித காவியம், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, சென்னை, பக். 368, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-5.html உலகளாவிய முக்கிய மதங்களில் ஒன்று பௌத்தம். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இதைத் தோற்றுவித்தவர் கௌதம புத்தர். எல்லா மதங்களும் கடவுள் உண்டு என்ற கொள்கையில் தோன்றியவை என்றால், பௌத்தம் மதம் மட்டும் கடவுள் இல்லை என்ற வித்தியாசமான கருத்தில் உருவானது. ஆனாலும் கடவுளுக்கு அடுத்துள்ள தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரை மற்ற மதத்தினர் ஏற்பதைப்போல் புத்தரும் ஏற்கிறார். […]

Read more

மழைநாளின் காகிதக் கப்பல்

மழைநாளின் காகிதக் கப்பல், வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 108, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-424-8.html ஒரு நிகழ்வு பார்க்கும்போது தரும் அர்த்தம் வேறு. சாந்தகுமாரியின் கவிதை வார்ப்புக்குள் வரும்போது தரும் அர்த்தம் வேறு. சமூக அக்கறையும் உலகப் பார்வையும் கொண்ட வீரியம்மிக்க, மனித நேயக் குரலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சம்பிரதாயத்தை உடைக்கும் துணிச்சல் தெரிகிறது. சமாதானம், நடுநிலை என்பதெல்லாம் மாயவேலி என அடையாளம் காட்டி, அதைத் தகர்த்தெறிகிறார். அரிதாரம் பூசாத […]

Read more

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2, கலீல் ஜிப்ரான், கிருஷ்ணபிரசாத், காவ்யா, தொகுதி 1, பக். 1412, தொகுதி 2, பக். 1312, விலை ரூ.1400, 1300. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரான் ஒரு கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியலாளர். அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது. அதுவும் தமிழில் சாத்தியம் குறைவே. அந்தக் குறையை நிறைவாக செய்திருக்கிறார் கிருஷ்ணபிரசாத். முதல் தொகுதியில் கலீல்ஜிப்ரான் கவிதைகளான […]

Read more

ஆலமரம்

ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-5.html இளைப்பார ஓர் ஆலமரம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்காக ஏங்கிக் கிடக்கும் கணிசமான வாசகர்களை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் திருப்திப்படுத்தும். ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவலைப் படிக்க யாருக்கு இப்போதெல்லாம் அவகாசம் இருக்கிறது ? என்ற கேள்வியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் துணிவோடு படிக்கத் தொடங்கிவிட்டால் போதும். அன்று கடல் போல் சொத்துடன் ஒற்றையாக நின்ற அம்புஜம்! […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

வனமிழந்த கதை

வனமிழந்த கதை, கே. ஸ்டாலின், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 87, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-425-9.html உணர்ச்சிகளில் இருந்து தப்பிச்செல்ல முயலும் ஒவ்வொரு கவிஞனும், உணர்ச்சிகளில் இருந்துதான் தன் கவிதையைத் தொடங்கியாக வேண்டும். இப்படியான ஒரு அனுபவத்தையே கே. ஸ்டாலின் இக்கவிதைகள் உணர்த்துகின்றன. கவித்துவமும் மனிதத் தன்மையும் ஒருவகையில் உணர்ச்சிகளின் தூண்டுதலில் இருந்தே அடையாளம் காணப்படுகின்றன. திருவிழாவின் குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கும் பைத்தியமொன்றின் கைகளில் கிடைக்கக்கூடும் யாரோ யாருக்கோ அன்பொழுகத் தந்து தவறிப்போன சிறுபரிசொன்று என்ற கவிஞரின் […]

Read more

நீங்களும் வாகை சூடலாம்

நீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், சென்னை, பக். 224, விலை 200ரூ. அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல் கி.பி. 1840ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு இந்நூல். அதோடு இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸின் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அரேபியத் தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணி, நபிகள் (ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ள முக்கிய அம்சங்கள், அவர்களின் மூலம் இறைவன் இவ்வுலகிற்கு அளித்த அல்குர் […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை,  பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]

Read more

பிரிவை நேசித்தவன்

பிரிவை நேசித்தவன், அம்பி. ராஜேந்திரன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பாசத்தின் உணர்வுகளையும், தாய்மையின் உயர்வையும், உலக நடப்புகளையும் கவிதை வரிகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- நானொரு சிந்து, இசைப்பிரியன், இசை ஆலயம் மியூசிக் புக் பப்ளிகேஷன், சென்னை, விலை 70ரூ. நடப்பது நடக்கட்டும், எதைக்கொண்டு உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு கவிதை தொகுப்புகள் இடம் பெற்ற நூலாகும். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- […]

Read more
1 5 6 7