மழைநாளின் காகிதக் கப்பல்
மழைநாளின் காகிதக் கப்பல், வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 108, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-424-8.html ஒரு நிகழ்வு பார்க்கும்போது தரும் அர்த்தம் வேறு. சாந்தகுமாரியின் கவிதை வார்ப்புக்குள் வரும்போது தரும் அர்த்தம் வேறு. சமூக அக்கறையும் உலகப் பார்வையும் கொண்ட வீரியம்மிக்க, மனித நேயக் குரலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சம்பிரதாயத்தை உடைக்கும் துணிச்சல் தெரிகிறது. சமாதானம், நடுநிலை என்பதெல்லாம் மாயவேலி என அடையாளம் காட்டி, அதைத் தகர்த்தெறிகிறார். அரிதாரம் பூசாத நடிகர்கள் அரசியலில் இருப்பதை எச்சரிக்கும் தொனி, மழையில் நனைந்த மாட்டுக்காரச் சிறுவனுக்கு குடைபிடிக்க யார் இருக்கிறார்கள் என்பதில் அக்கறை, மொபட்டில் தொங்கும் கோழியின் உயிரில்கூட ஒரு சமூக சாடல் உள்ளது. ஈழ வேதனை, இளம்பருவக் கனவுகள், சாதிக்கெதிரான மௌனத்தைக் கலைக்கும் குரல் என பன்முகத்தன்மை கொண்ட உள்ளம் கவிஞருடையது. நன்றி: குமுதம், 5/1/2015.
—-
மஞ்சத்தண்ணி, உரப்புளி நா. ஜெயராமன், அட்சயா பதிப்பகம், இராமநாதபுரம் மாவட்டம், பக். 128, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-409-6.html நாற்பதாண்டு காலமாக, பல்வேறு சூழலில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு என்றாலும் இன்றைய காலகட்டத்திற்கும் உகந்த கதைகள். காலந்தோறும் சமுதாயம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை, இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளும் நமக்கு உணர்த்தும். வயதாக ஆக ஜீவகாருண்யத்தை இழந்து வரும் சமூக அலட்சியத்தைச் சொல்லும் மஞ்சத்தண்ணி சிறுகதை ஒன்றே போதும் நூலாசிரியரின் சமூக அக்கறைக்கு. கல்வியின் அவசியம், பசிக்கொடுமை, நதிகள் பொட்டல் காடாக மாறிவரும் அவலம் என்று எதைப் படித்தாலும், படித்து முடித்தபின் நமக்குள் ஏற்படும் அதிர்வுகள், நம்மையும் அவரோடு இச் சமூகத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கடிக்கின்றன. காலக்கண்ணாடி என்பது இலக்கியங்களுக்குப் பொருந்தும் என்பதை நிறுவும் சிறுகதைகள் இவை. நன்றி: குமுதம், 5/1/2015.