கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2
கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2, கலீல் ஜிப்ரான், கிருஷ்ணபிரசாத், காவ்யா, தொகுதி 1, பக். 1412, தொகுதி 2, பக். 1312, விலை ரூ.1400, 1300.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரான் ஒரு கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியலாளர். அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது. அதுவும் தமிழில் சாத்தியம் குறைவே. அந்தக் குறையை நிறைவாக செய்திருக்கிறார் கிருஷ்ணபிரசாத். முதல் தொகுதியில் கலீல்ஜிப்ரான் கவிதைகளான கடவுளின் தூதர், தூதரின் தோட்டம், மணலும் நுரையும் உள்ளிட்ட அனைத்தும் புதுக்கவிதை வடிவில் தந்து பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-391-6.html இரண்டாம் தொகுதியில் கலீல் ஜிப்ரானின் ஏனைய ஆக்கங்களையும் புதுக்கவிதைகளாக வடித்து, தமிழுக்கு அரிய பொக்கிஷத்தைத் தந்துள்ளார். கவிதைகளின் மூலம் கடவுளைத் தேடும் முயற்சி இதில் நடந்தேறியுள்ளது. கலீல் ஜிப்ரானை ஒரு குடையின் கீழ் தரிசிக்க விரும்புவோருக்கும், ஆய்வாளர்களுக்கும் கிடைத்தற்கரிய வாய்ப்பு இத்தொகுதிகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 5/1/2015.