நீங்களும் வாகை சூடலாம்
நீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ.
ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு உங்களின் ஆழ்மனதிலேயே உள்ளது. எனவே ஆழ்மனதை அறிய முயலுங்கள். ஆழ்மனத்தின் உதவியால் உங்கள் அச்சத்தை அகற்ற முடியும் என்கிறார். எதையும் மாற்றி யோசிக்கப் பழகுங்கள். கோபத்தைத் தடுத்து நிறுத்தும் சக்தி வந்துவிட்டால் இந்த உலகையே நீங்கள் வெல்லலாம். இப்படி உங்களை நீங்களே புரிந்துகொண்டு செயல்பட்டால் உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும் எதையும் வென்று வாகை சூடலாம் என்பது இந்நூலின் நோக்கம். நன்றி: குமுதம், 19/1/2015.
—-
சிரியா முதல் ஜோர்டான் வரை சிறப்பான பயண அனுபவங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
சிரியா, எகிப்து, துருககி, ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் பயணம் செய்தபொழுது ஏற்பட்ட பயண அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார் சி.ஜே. ஷாஜஹான். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.