பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை, பி.எல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக்.143, விலை 60ரூ. பாரதியின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க. , டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ., வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனகலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதிபற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப்பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை […]

Read more

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை,  பக். 208, விலை 80ரூ. பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more