மருத்துவ மன்னர்கள்

மருத்துவ மன்னர்கள்,  ஹெலன் கிலேப்ப சேட்டில், தமிழில்  அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை  ரூ.160. மருத்துவத் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் மேயோ குடும்பத்தினர் குறித்து எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியான இந்நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் டாக்டர் வில்லியம் வாரல் மேயோவும், அவரது மகன்களான டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் மேயோ மற்றும் சார்லஸ் ஹொரே மேயோவும் கட்டமைத்த மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தின் கதைதான் இந்நூல். ஒரு மருத்துவக் […]

Read more

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது, தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம், பக்.120, விலை  ரூ.100. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்வின் பல்துறை சார்ந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதலும், கருத்துகளும் உடையவராக இருந்திருக்கிறார். கப்பல் ஓட்டிய தமிழராக, தொழில்முனைவோராக இருந்த அவரே, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டும்விதமாக பலரால் எழுதப்பட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருமூலர் […]

Read more

சுய கர்மயோகம்

சுய கர்மயோகம், ஏகேஎம். லெப்பைக்கனி, காமா பப்ளிகேஷன்ஸ், பக்.96,  விலை குறிப்பிடப்படவில்லை. “சுய கர்ம யோகம்’ என்ற நூலின் தலைப்பைப் பார்த்தமாத்திரத்திலேயே இது ஒரு யோகாசனம் தொடர்பான நூல் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நூலாசிரியரின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது. “சுய கர்மயோகம் என்றால், ஒரு மனிதன் செய்யும் காரியம் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படக் கூடிய சிறப்பான காரியமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்கிறார். மருத்துவரான நூலாசிரியர் ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. மருத்துவம் தொடர்பான […]

Read more

தமிழிலக்கணக் கோட்பாடுகள்

தமிழிலக்கணக் கோட்பாடுகள் (விரிவாக்கப் பதிப்பு), பொன்.கோதண்டராமன் (பொற்கோ), பூம்பொழில் வெளியீடு,  பக்.124, விலை ரூ.120. உலகிலேயே எழுத்து வடிவில் தோன்றிய முதல் இலக்கண நூல் என்கிற சிறப்பு தொல்காப்பியத்துக்கு இருப்பதைப் போலவே, தொல்காப்பியருக்கென்று ஒரு கொள்கையும் இருக்கிறது. அதுதான் தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கை. “அந்த இலக்கணக் கொள்கையைப் பின்னால் வந்த எந்த இலக்கணக்காரரும் புரிந்து கொண்டதாகத்தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய பொருள்தான் தொல்காப்பியர் உணர்த்தும் இலக்கணக் கொள்கை’ என்கிறார் நூலாசிரியர் பொற்கோ. கல்லூரி நிகழ்ச்சிகளில், கருத்தரங்குகளில் பேசிய உரையின் தொகுப்பாக அமைந்துள்ளது […]

Read more

வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை

வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை, ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், வெர்சோ பேஜஸ் பதிப்பகம்,  பக்.160, விலை  ரூ.200. வடலூரின் தோற்றம் முதல் நிகழ்காலம் வரையிலான வரலாற்றைக் கூறும் நூல்.<br>பார்வதிபுரம் வடலூரான வரலாறு, இராமலிங்க பெருமானின் வரலாறு என வரலாற்றுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. திருவருட்பாவில்தான் வடலூர் என்ற பெயர் முதன்முதலாககுறிப்பிடப்பட் டுள்ளது என்ற செய்தியை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருத்துவம், இசுலாம் போன்ற மதங்களின் தாக்கம் பற்றியும், அம்மதங்கள் எப்படி மனிதத்தையும், […]

Read more

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு வெளியீடு, விலை 200ரூ. அடிக்கடி ஆலயம் செல்பவர்களுக்கு அதிகமாக நோய்கள் வருவதில்லை என்று கூறி இருக்கும் ஆசிரியர், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தந்து இருக்கிறார். கோயில் கோபுர வகைகள், கருவறை, கொடிமரம், பலிபீடம் போன்ற அனைத்து விவரங்களையும், வழிபாட்டு முறைகள், அபிஷேகம், நைவேத்தியம் போன்றவை பற்றிய தகவல்களும், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் சிறப்பு, 18 வகை பிரதோஷங்களின் பயன்கள், ருத்திராட்சம், சாளக்கிராமம், தர்பைப் புல் போன்றவற்றின் சிறப்புகளும் எளிய நடையில் […]

Read more

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ… மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் – புதல்வர்நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப் பிறப்பு, மறு பிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர்… என மாண்புகள் சொல்லப்படுகின்றன. நாரதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களையும், அவற்றின் […]

Read more

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு, தொகுப்பு ஆசிரியர் க.செந்தமிழ்ச் செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 225ரூ. இந்த நூல், நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு என்ற பெயரைக் கொண்டு இருந்தாலும், நாடார் சமூகம் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் தாங்கி இருக்கிறது. திருச்செந்தூரின் தென் கிழக்குப் பகுதியே நாடார்களின் தாய் பூமி, பழங்காலத்தில் எகிப்தில் குடியேறியவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து சென்ற நாடாகள், குறுந்தொகையில் 40-க்கும் மேற்பட்ட பாடல்களில் நாடன் என்ற சொல் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் […]

Read more

சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more

வட சென்னை வரலாறும் வாழ்வியலும்

வட சென்னை வரலாறும் வாழ்வியலும், நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. வடசென்னையில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்ற வியப்பை இந்த நூல் தருகிறது. கால வெள்ளத்தில் புதைந்துபோன கட்டிடங்கள், மக்கள் மறந்துவிட்ட வரலாற்றச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றைத் தேடி அலைந்த கதை, அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற செய்த முயற்சி, அவற்றைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், என்று பல வகையான உணர்வுகளை இந்த நூல் தருகிறது. சீனப்பெருஞ்சுவர் போன்று வட சென்னையில் கட்டப்பட்ட பெருஞ்சுவர், […]

Read more
1 2 3 4 5 9