சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more

பேய்க்கரும்பு

பேய்க்கரும்பு, அபிராஜ ராஜேந்திர மிச்ரா, சாகித்திய அகாடமி, விலைரூ.115 சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக அமைந்து உள்ளன. அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து கவித்துவமாக வெளிப்பட்டுள்ளன. மானுட உளவியலையும், இந்தியாவின் நவீன சமூக அமைப்பு முறையையும் கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்குகின்றன. முதல் கதை, ‘வாழ வேண்டும் என்ற ஆசை’ என்ற தலைப்பிலானது. விரும்பிய ஆசை, மிக இயல்பாக நிறைவேறுவதை எளிமையாக உறுதி செய்து ஒரு சிற்பம் போல் வடித்துள்ளார் ஆசிரியர். தொகுப்பின் இறுதிக் […]

Read more

கதை இல்லாதவனின் கதை

கதை இல்லாதவனின் கதை, முனைவர் த.விஷ்ணு குமாரன், சாகித்திய அகாடமி, பக். 544, விலை 400ரூ. மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பேராசிரியர் த.விஷ்ணு குமாரன். மலையாளம், ஜெர்மன், ஆங்கிலம் முதலான மொழிகளை நன்கு அறிந்த தமிழ்ப் பேராசிரியர் என்பதால், மொழிபெயர்ப்புஉலகில் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் பெற்று உள்ளார். மலையாளத்தில் வீட்டை, ‘மனை’ என சொல்வது வழக்கம். மனை என்றால் நாம் கட்டுவது போன்ற அடுக்குமாடி வீட்டையோ அல்லது நான்கு பக்கமும் நடமாடுவதற்கு […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர். ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், தொகுப்பு அ.வெண்ணிலா, சாகித்திய அகாடமி, விலை 200ரூ. வரலாற்றில் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை போன்ற தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை, பல அரிய தகவல்களைத் தாங்கி இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு, தற்போதுதான் அதிக அளவில் தோன்றி இருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பலரின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவர்களை மெச்சும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்து படித்து இன்புறும் வகையில் அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ. சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத். பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன. நிலம், […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், இரா. காமராசு, சாகித்திய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்!, மஹீப் சிங் (மூல ஆசிரியர்), தமிழாக்கம் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாடமி, பக். 126, விலை 50ரூ. சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல் வலிமையின் உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் தன் தந்தையை கைதாக்கி, சகோதரர்களை கொன்று தானே, ‘ஆலம்கீர்’ – உலகை வென்றவன் என்ற பட்டத்தை ஒட்டிக் கொண்டு, முகலாய இந்தியாவின் பேரரசனாக, எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவுரங்கசீப் பின்பற்றிய […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், சாகித்திய அகாடமி, விலை 120ரூ. ஒவ்வொரு மொழியிலும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களின் கதைகளை, மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை சாகித்திய அகாடமி செய்து வருகிறது. கன்னடத்தில் சிறந்த எழுததாளராக விளங்கும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய சிறந்த சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, “மாஸ்தி சிறுகதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சேஷநாராயணா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

திரைப்பட இசைப்பாடல்கள்

திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ. தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது […]

Read more
1 2