மண்ணும் மனிதரும்
மண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ.
கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர்.
ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக் கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. நகரங்களுக்கு சென்று, வாழ்க்கை நடத்த முயல்கிற பேரனுக்கு, வாழ்க்கை கசந்து போகிறது. அந்தக் குடும்பப் பெண்கள் நிலை நிறுத்தவும், முன்னேறவும் போராடுகின்றனர். மண்ணும், மழையும், கடலும் தங்களுக்குரிய மணத்தோடு இயற்கையின் வண்ணங்களோடும் நிழலாடுகிறது.
-ஸ்ரீநிவாஸ் பிரபு,
நன்றி: தினமலர், 5/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818