பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ. சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத். பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன. நிலம், […]

Read more

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ. 18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப். மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை […]

Read more

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும்

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும், இரா. சம்பத், முரண்களரி பதிப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 68, பக். 184, விலை 120ரூ. தமிழ்க் கவிதை என்பது மிக நீண்டதொரு வரலாற்றுப் பழமையினைக் கொண்டது. புதுக்கவிதையின் வகைமை, மரபுக்கவிதையில் கோட்பாடு, இலக்கிய மரபு, கவிதை மரபு, இலக்கியவியல் நோக்கு, யாப்பியல் நோக்கு எனப் பன்முகப் பார்வையில், தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு, பாரதியார், தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரின் கவிதை மரபுகள் முதலியவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியவியல், யாப்பியல், மொழியியல் நோக்கில் எழுத்து […]

Read more