திரைப்பட இசைப்பாடல்கள்
திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ.
திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.
—-
பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ.
தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது வாழ்க்கைக் கதைதான் இந்நூல். மலையாளத்தில் எம்.கே. ஸானு எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நிர்மால்யா.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.