வெள்ளத் தாண்டவம்
வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை நகரிலும், சுற்றுப்புறங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சியாகும்.
இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் கண்டு மனம் நொந்த நீதிபதியும், கவிஞருமான மூ.புகழேந்தி, அந்த நிகழ்ச்சியை கவிதை வடிவில் கண்ணீர்க் காவியமாகவே வடித்துத் தந்துள்ளார்.
ஒரு துயர நிகழ்ச்சியை காவியமாக வடித்துள்ள நீதிபதி புகழேந்தி பாராட்டுக்கு உரியவர். பல சம்பவங்களை அவர் வர்ணிக்கும்போது, படிப்பவர்கள் கண் கலங்கிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடியபோது, பத்திரிகைகளில் வந்த செய்திகளையும், படங்களையும் பின் இணைப்பாக சேர்த்து இருப்பது புத்தகத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.