சுய கர்மயோகம்
சுய கர்மயோகம், ஏகேஎம். லெப்பைக்கனி, காமா பப்ளிகேஷன்ஸ், பக்.96, விலை குறிப்பிடப்படவில்லை.
“சுய கர்ம யோகம்’ என்ற நூலின் தலைப்பைப் பார்த்தமாத்திரத்திலேயே இது ஒரு யோகாசனம் தொடர்பான நூல் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நூலாசிரியரின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது. “சுய கர்மயோகம் என்றால், ஒரு மனிதன் செய்யும் காரியம் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படக் கூடிய சிறப்பான காரியமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்கிறார்.
மருத்துவரான நூலாசிரியர் ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
மருத்துவம் தொடர்பான அவருடைய வித்தியாசமான கருத்துகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது நிலம் ஆரோக்கியமில்லாமல் போகிறது.
“ஆரோக்கியம் இல்லாத மண் ஆரோக்கியமான தானியத்தைத் தர முடியாது. ஆரோக்கியமில்லாத தானியம் ஆரோக்கியமான உணவு தர முடியாது. ஆரோக்கியம் இல்லாத உணவு ஆரோக்கியமான மனிதனைத் தர முடியாது’ என்கிறார் நூலாசிரியர்.
“எதற்கெல்லாமோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் இனிப்பு நீர் என்று சொல்லக் கூடிய கணைய நோயைக் குணமாக்கும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தவறியது ஏன்?’
“கரோனா என்ற வைரஸ் நோய் தாக்கிய உடன் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கத் தெரிந்த உங்களுக்கு இந்த நோய்க்கு (சர்க்கரை வியாதிக்கு) தடுப்பூசி கண்டுபிடிக்கத் தெரியாதா?’ என்ற நூலாசிரியரின் இவை போன்ற கேள்விகள் வாசகர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கின்றன.</p>
நன்றி: தினமணி, 13/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818