வட சென்னை வரலாறும் வாழ்வியலும்
வட சென்னை வரலாறும் வாழ்வியலும், நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ.

வடசென்னையில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்ற வியப்பை இந்த நூல் தருகிறது. கால வெள்ளத்தில் புதைந்துபோன கட்டிடங்கள், மக்கள் மறந்துவிட்ட வரலாற்றச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றைத் தேடி அலைந்த கதை, அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற செய்த முயற்சி, அவற்றைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், என்று பல வகையான உணர்வுகளை இந்த நூல் தருகிறது.
சீனப்பெருஞ்சுவர் போன்று வட சென்னையில் கட்டப்பட்ட பெருஞ்சுவர், அதற்கு விதிக்கப்பட இருந்து சுவர் வரி, அதனால் உருவான வால்டாக்ஸ் சாலை மாடித்தோட்டம்,இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அமைத்த பதுங்ககுழி, கிளி பங்களா, குணங்குடி மஸ்தான் தர்கா போன்ற பழங்கால நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை இந்த நூல் தருகிறது.
நன்றி: தினத்தந்தி,18/4/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9788194932192_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818