தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக். ஹவுஸ், விலை 80ரூ. சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவனுடன் கொண்டு இருந்த தொடர்பு பற்றி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சுவைபட விவரித்து இருக்கிறார். தொ.பரமசிவன் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது, அவருடன் இருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், அவர் மூலம் கிடைத்த அரிய செய்திகள், பட்டிமன்றம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கு தொ.ப.அளித்த ஆக்கபூர்வமான தூண்டுதல் ஆகிய அனைத்தையும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இந்த நூலில் தந்து இருப்பதோடு, தனது நூல்களுக்கு தொ.ப. அளித்த முன்னுரைகளையும் இணைத்து இருப்பதால் படிக்க […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.300. ஒரு சின்ன பூனைக் குடும்பம்; அதுல, அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பூனைன்னு அன்பு அன்பா குடும்பம் நடந்துச்சாம்… ஒரு நாள், அப்பா பூனை செத்துப் போச்சாம். அப்போ அம்மா பூனையும், குட்டி பூனையும் அப்பாவோடு பேசி மகிழ்ந்த வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி அழுதுச்சாம்… அது ரெண்டும் என்ன சொல்லி அழுதுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்? ரஜினி சாரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னா, எப்பவுமே தலையை […]

Read more

குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 800ரூ. 1860-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் 2013-ம் ஆண்டு வரை செய்யப்பட்ட குற்றவியல் சட்டதிருத்தங்கள் உள்பட அனைத்து பிரிவுகளும் தரப்பட்டு இருக்கின்றன. என்னென்ன செய்கைகள் குற்றத்தன்மை கொண்டவை, அவற்றுக்கு என்ன தண்டனை ஆகியவை விளக்கி கூறப்பட்டுள்ளன. இந்திய சாட்சியச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் ஆகியவற்றில் தற்போது வரை இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான வழக்கு தீர்வுகளும், தமிழ்நாடு தேர்வாணயத் தேர்வுகளுக்குப் பொருந்தும் சட்டங்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சட்டம் தொடர்பான […]

Read more

விஷக்கிணறு

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. புது அனுபவங்கள் ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு), சிவ. விவேகானந்தன், காவ்யா,  பக்.1185, விலை  ரூ.1200. பாரதத்தில் தோன்றி உலகம் முழுதும் பரவி அழியாப் புகழ் கொண்ட இரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும்.வால்மீகியின் இராமாயணத்தையொட்டி, கம்பர் உள்ளிட்ட சிலர் இராமாயணத்தை எழுதினர்.அவ்வாறே வியாசரின் மகாபாரதத்தையொட்டிப் பலரும் பாரதம் படைத்தனர். இந்த “பாகவதப் பாரதம்’, பாகவதம், பாரதம் ஆகிய இரு இதிகாசங்களையும் பகுத்து ஆராய்ந்து, அவற்றின் சிறப்புகளைத் தேர்ந்தெடுத்து பாகவதத்தின் கூறுகளை பாரதத்தில் பொருத்தி ஏறத்தாழ 26,000 அடிகளைக் கொண்டதாக அம்மானை வடிவில் புதிய பாரதமாகப் படைக்கப்பட்டுள்ளது. இது […]

Read more

இது கதையன்று வாழ்க்கை

இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், எழில் நிலையம், விலை 140ரூ. தமிழ் வாழ்ககை நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர். சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர், கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழக்கை’. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச்செல்கிறார். பெரும்பாலும் தமிழ் இலக்கிய […]

Read more

போராடக் கற்றுக்கொள்

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ. உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் […]

Read more

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள், (பெண் தொன்மம் குறித்த ஆய்வுகள்), பெ. நிர்மலா, பல்கலைப் பதிப்பகம், விலை: ரூ.140. ‘பல்வேறு வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு உன்னதமான வையாகவும் முன்மாதிரிகளாகவும் காட்டப்படும் காலத்துக்கு ஒவ்வாத ஆண், பெண் பற்றிய புனைவுக் கற்பனைகளை அடையாளம் காட்டுகின்றன இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், சிற்பங்கள், புராணங்கள், வழிபாட்டு மரபுகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணப்படுகிற பால் வேற்றுமைப் பதிவுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள், நாம் வாழும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. நன்றி: தமிழ் […]

Read more

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி, நக்கீரன், காடோடி வெளியீடு, விலை: ரூ. 70, சிதைக்கப்பட்ட வாழ்க்கை எங்குமே பெண்களின் மீதான மதிப்பு என்பது அவர்களது உடலை மையமிட்டதாகவே அமைகிறது. அந்த மதிப்பீடு ஆண்களின் உடலுக்குப் பொருந்துவதில்லை. அத்தகைய சீரழிக்கப்பட்ட பெண் உடலின் அவலங்களைப் பேசுகிறது இந்தக் குறுநாவல். இதயம்கூட வெறும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை இது. சிதைக்கப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டது. உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட, குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நாவல் புரட்டிக்காட்டுகிறது. […]

Read more

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் (அராபியப் பெண்ணியச் சிறுகதைகள்), தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி. வெளியீடு,  எதிர் வெளியீடு, விலை: ரூ.160. வாழ்க்கைக் கதைகள் மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்ரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகாலப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம் – தாய்மை, காதல், கல்வி, பணி, சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. நன்றி: […]

Read more
1 2 3 4 5 6 9