தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக். ஹவுஸ், விலை 80ரூ. சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவனுடன் கொண்டு இருந்த தொடர்பு பற்றி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சுவைபட விவரித்து இருக்கிறார். தொ.பரமசிவன் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது, அவருடன் இருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், அவர் மூலம் கிடைத்த அரிய செய்திகள், பட்டிமன்றம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கு தொ.ப.அளித்த ஆக்கபூர்வமான தூண்டுதல் ஆகிய அனைத்தையும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இந்த நூலில் தந்து இருப்பதோடு, தனது நூல்களுக்கு தொ.ப. அளித்த முன்னுரைகளையும் இணைத்து இருப்பதால் படிக்க […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காவ்யா, விலை 370ரூ. பன்முக வித்தகரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்தவை அடங்கிய இந்த நூலில் தனது சொந்த ஊரான சோழவந்தானைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அரசஞ் சண்முகனார் ஆற்றிய தமிழ்ப் பணிகளைத் திறம்பட வெளிக்கொணர்ந்து இருக்கிறார். அரசஞ் சண்முகனார், வ.உ.சி.க்கு தொல்காப்பிய இலக்கணத்தைக் கற்றுக்கொடத்தார் என்பதையும், பாரதியார், உ.வே.சா., மறைமலையடிகள், ராகவையங்கர் போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார் என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசஞ் சண்முகனாரின் இலக்கண, […]

Read more