அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி
அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காவ்யா, விலை 370ரூ.
பன்முக வித்தகரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்தவை அடங்கிய இந்த நூலில் தனது சொந்த ஊரான சோழவந்தானைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அரசஞ் சண்முகனார் ஆற்றிய தமிழ்ப் பணிகளைத் திறம்பட வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.
அரசஞ் சண்முகனார், வ.உ.சி.க்கு தொல்காப்பிய இலக்கணத்தைக் கற்றுக்கொடத்தார் என்பதையும், பாரதியார், உ.வே.சா., மறைமலையடிகள், ராகவையங்கர் போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார் என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசஞ் சண்முகனாரின் இலக்கண, இலக்கிய நூல்களையும், மறுப்புக் கட்டுரைகளையும் விரிவாக ஆய்வு செய்து தந்து இருக்கும் தகவல்கள், தமிழ் ஆர்வலர்களுக்குப் பொக்கிஷம் போல அமைந்து இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 14/2/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818