விஷக்கிணறு
விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ.
புது அனுபவங்கள்
ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை.
இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் காணாதவர்கள். இதற்குப் பந்து ஆட்டத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் களி என்ற சிறுகதையை இந்த தொகுப்பில் இடம் பெற்ற கதைகளில் முக்கியமானதாகக் கருதலாம். புனைவுகளின் மூலம் சட்டென்று ஆழ்மனதுக்குள் புகுந்துவிடுகிற கலை சுனில்கிருஷ்ணனுக்கு மிக எளிதாக கைவரப்பெற்றுள்ளது. அசலான தமிழக நிலப்பரப்புகள், புனைவில் பறக்கும் குருவிகள், மலேயா தெருக்களில் அலையும் கவிஞன் என வெவ்வேறு எல்லைகளைத் தாண்டிச்செல்லும் கூறுகளுடன் அமைந்திருககும் தொகுப்பு இது.
நன்றி: டிசம்பர், அந்திமழை, 2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031081_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818