ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.140. ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன. ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் […]

Read more

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ, அ.கா.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.135 நாட்டார் இலக்கியம் தொடர்பான 12 கட்டுரைகளைக் கொண்ட நுால். பேரிலக்கிய வடிவத்தைப் பெற்றாலும் மக்களின் கதையாகவே கண்ணகி கதை விளங்குகிறது. சிலப்பதிகாரம் என்னும் தலைப்பே நாட்டுப்புற மக்களை அந்நியப்படுத்தி, இலக்கியத் தகுதியை வழங்குவதாக அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் உணர்வர்.கி.பி., 8ம் நுாற்றாண்டில் நம்பூதிரிகள் துளு நாட்டிலிருந்து கேரளத்திற்கு வந்த பின், கண்ணகி வழிபாடு மேனிலையாக்கம் பெற்று, பகவதி வழிபாடு ஆனது என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவம், சோதிடம், இலக்கியம் என பல்வேறு துறை […]

Read more

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள்

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.300. எம்.எல்.பிள்ளை, பூசைப்பிள்ளை, தமிழ்க்காசு என்ற பெயரிலும் போற்றப்பட்டவர் கா.சு.கா., காசு பிள்ளை என்ற கா.சுப்பிரமணிய பிள்ளை; அவரது கடைசி காலத்தில், ‘காசில்லாத காசு’ என்ற கேலிக்கும் உள்ளானவர். சைவம், சட்டம், இலக்கியம் என்ற அறிவுத் துறைகளில் காலம் முழுதும் இயங்கி வந்தார். இவரது ஆய்வு முறையை மூல முறை, ஒப்பீட்டு முறை, தருக்க முறை என பகுப்பார் பேராசிரியர் கருவை பழனிசாமி. தமிழுக்குப் பெருமை தேடியவர்; அதன் மேன்மையை நிறுவியவர்; தன்னலங்கருதாது உழைத்தவர். […]

Read more

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் , தொகுப்பாசிரியர்: தேவி நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம்,பக். 288, விலை  ரூ.180.  தமிழில் குழந்தை இலக்கியத்தை ஓர் இயக்கமாக வளர்த்த “குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டை- நினைவைப் போற்றும் வகையில் வெளிவந்திருக்கிறது இத்தொகுப்பு. அழ.வள்ளியப்பாவுடன் பழகியவர்கள், நண்பர்கள் என நூறு பேரிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்து, கவிதை, கட்டுரை, கருத்துரை, புதிய கட்டுரைகள் ஆகியவை நான்கு பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளன.  பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சௌந்தரா கைலாசம், சுப.வீரபாண்டியன், குழ.கதிரேசன், பூவண்ணன், அய்க்கண், திருப்பூர் கிருஷ்ணன், இனியவன், […]

Read more

1232 கி.மீ.

1232 கி.மீ., வினோத் காப்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.282; விலை ரூ.350. கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 24, 2020 இல் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்களில் பெரும்பாலோர் நடந்தே தத்தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து 1232 கி.மீ. தொலைவில் உள்ள பிகார் மாநிலம் சகர்ஸு மாவட்டத்திலுள்ள தங்களது […]

Read more

வழிகாட்டும் விவேக சிந்தாமணி

வழிகாட்டும் விவேக சிந்தாமணி, நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க், பக்.112, விலை ரூ. 100. விவேக சிந்தாமணி இரு பாகங்கள் கொண்டது. அதில் இடம்பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 245. அதில் 98 செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர் விளக்க உரை அளித்திருக்கிறார். “விவேகம்’ என்றால் நல்லது எது கெட்டது எதுவென்று பகுத்துணரும் அறிவு. “சிந்தாமணி’ என்றால் ரத்தினக்கல் – விலைமதிப்பற்றது என்று விளக்கமும் கூறுகிறார் நூலாசிரியர். “கூடா நட்பு’ , “அற்பரின் நட்பு கூடாது’, “வேண்டாம் நட்பு’, “நட்பின் உயர்வு’, “சான்றோர் நட்பு’- இவையெல்லாம் […]

Read more

அந்த நிருபரின் பேனா…

அந்த நிருபரின் பேனா…, ஆர்.நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.195, விலை ரூ.175. நூலாசிரியர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை மூன்றாம் நபர் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “ஹிந்து’ ஆங்கில நாளிதழின் தென்னாற்காடு நிருபராகவும், பின்னர் உதவி ஆசிரியராகவும் நூலாசிரியர் பணியாற்றியுள்ளார். புதிதாக நிருபர் பணி ஏற்பவர்களை செய்தி சேகரிக்க அப்போதெல்லாம் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புவார்கள். நூலாசிரியர் நிருபர் பணியும் சென்னை பொது மருத்துவமனையின் பிணவறையில்தான் தொடங்கியிருக்கிறது. இறந்தவரைப் பற்றிய தகவலைத் திரட்டியது முதல் செய்தியானது. சாரணர் இயக்கத்தின் இலட்சிய வாசகம் “தயாராக இரு’. நிருபர்களுக்கும் […]

Read more

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், பல்லடம் மாணிக்கம், காமாட்சி சண்முகம்; காவ்யா, பக்.396, விலை ரூ.400; கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய சான்றோருள் குறிப்பிடத்தக்கவர் தெ.பொ.மீ. எனப்படும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார். அவர் இந்நூலில், தமிழ்மொழியின் வரலாற்றைச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். தமிழ்மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பட்டியலிடும் முதல் கட்டுரையில் தொடங்கி, “மூலத் திராவிட மொழி’, “தென் திராவிட மொழிகளும் தமிழும்’, “தொல்காப்பியத் தமிழ்’, “சங்ககாலத் தமிழ்’, “பல்லவர் சோழர் நாயக்கர் காலத் தமிழ்’ உள்ளிட்ட பத்து தலைப்புகளில் தமிழ்மொழியை […]

Read more

பல கோணங்களில் பசும்பொன் தேவர்

பல கோணங்களில் பசும்பொன் தேவர் (கட்டுரைகள்), தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.260. சாதித் தலைவரைப் போலவும் மதத் தலைவரைப் போலவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்தும் இன்றைய காலகட்டத்தில், அந்த கண்ணோட்டத்தை மறுக்கும்விதமாக வெளிவந்திருக்கிற இந்த நூல், தேவரின் ஆளுமையைப் பற்றிய எண்ணற்ற சித்திரங்களைக் கட்டுரைகளாகத் தருகிறது. சாதி வட்டத்துக்கு அப்பாற்பட்டவராகப் பசும்பொன் தேவர் திகழ்ந்தது பற்றியும் அவருடைய பல செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றியும் மகரிஷி சுத்தானந்த பாரதியார் தொடங்கி, மா. இராசமாணிக்கனார் வரை 56 பேரின் சிந்தனைகள் […]

Read more

கலைஞர்: இலக்கியத்தடம்

கலைஞர்: இலக்கியத்தடம், சு.சண்முக சுந்தரம், காவ்யா, பக். 352, விலை ரூ.350. கலைஞர் மு.கருணாநிதியை இன்றைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறேன் – என்று கூறும் நூலாசிரியர் கலைஞரின் பன்முக ஆளுமைகளை இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார். கருணாநிதியின் தமிழ்ப்பணி குறித்து கூறும்போது, நாடகங்களான “தூக்குமேடை’ தொடங்கி “மணிமகுடம்’ வரையிலும், சிறுகதை என்றால் “குப்பைத்தொட்டி’ தொடங்கி திடுக்கிட வைக்கும் சிறுகதைகள் வரையிலும், நாவல் என்றால் “புதையல்’ தொடங்கி “பொன்னர் சங்கர்’ வரையிலும் எந்தெந்த காலத்தில் – எந்தெந்த பத்திரிகைகளில் அவை […]

Read more
1 2 3 4 9