பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ, அ.கா.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.135 நாட்டார் இலக்கியம் தொடர்பான 12 கட்டுரைகளைக் கொண்ட நுால். பேரிலக்கிய வடிவத்தைப் பெற்றாலும் மக்களின் கதையாகவே கண்ணகி கதை விளங்குகிறது. சிலப்பதிகாரம் என்னும் தலைப்பே நாட்டுப்புற மக்களை அந்நியப்படுத்தி, இலக்கியத் தகுதியை வழங்குவதாக அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் உணர்வர்.கி.பி., 8ம் நுாற்றாண்டில் நம்பூதிரிகள் துளு நாட்டிலிருந்து கேரளத்திற்கு வந்த பின், கண்ணகி வழிபாடு மேனிலையாக்கம் பெற்று, பகவதி வழிபாடு ஆனது என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவம், சோதிடம், இலக்கியம் என பல்வேறு துறை […]

Read more

கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன், (சோ.அழகர் சாமியின் வாழ்க்கைத் தடம்),  எஸ்.காசிவிஸ்வநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.366,  விலை ரூ.335. எட்டயபுரத்துக்கு அருகில் உள்ள ராமனூத்து என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் சோ. அழகர்சாமி. தனது 14 வயதிலேயே நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்த அவர் காங்கிரஸ், சோசலிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்களை எட்டயபுரத்துக்கு வரவழைத்து அரசியல்மாநாடுகள் நடத்தியிருக்கிறார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். 1948 – இல் கம்யூனிஸ்ட் […]

Read more

திருமூர்த்தி மண்

திருமூர்த்தி மண் (நாவல்) படுகளம்-2, ப.க. பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.524, விலை ரூ.530.  நூலாசிரியரின் படுகளம் நாவலைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப்பின் திருமூர்த்தி மண்-படுகளம் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. திருமூர்த்தி மலைக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே உள்ள பள்ளிபுரம் கிராமத்தைச் சுற்றிதான். கரும்பும் நெல்லும் பிரதான தொழில்கள். வழக்கம் போல் ஊரின் 3 முக்கிய கவுண்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே காலம்காலமாக தொடரும் விரோதமே படுகளத்தின் கரு. திருமூர்த்தி மண்- 1935-ஆம் ஆண்டு முதல் 1985 வரையுள்ள 50 ஆண்டு […]

Read more