திருமூர்த்தி மண்
திருமூர்த்தி மண் (நாவல்) படுகளம்-2, ப.க. பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.524, விலை ரூ.530.
நூலாசிரியரின் படுகளம் நாவலைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப்பின் திருமூர்த்தி மண்-படுகளம் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.
திருமூர்த்தி மலைக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே உள்ள பள்ளிபுரம் கிராமத்தைச் சுற்றிதான். கரும்பும் நெல்லும் பிரதான தொழில்கள். வழக்கம் போல் ஊரின் 3 முக்கிய கவுண்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே காலம்காலமாக தொடரும் விரோதமே படுகளத்தின் கரு.
திருமூர்த்தி மண்- 1935-ஆம் ஆண்டு முதல் 1985 வரையுள்ள 50 ஆண்டு காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பின் உழவுத் தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்னைகளால், பலர் வேலைக்காக திருப்பூருக்கு இடம் பெயர்கின்றனர். பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். பள்ளிபுரம் கிராமமும் முந்தைய அடையாளத்தை இழந்து வந்தது. இருப்பினும் ஆங்காங்கே தோன்றிய பஞ்சாலைகள் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி வந்தது. இத்தகைய சூழலை அடிப்படையாகக் கொண்டு அந்த மக்களின் வாழ்க்கையை இந்நாவல் விவரிக்கிறது.
படுகளத்தைப் போலவே கொங்கு தமிழில் அலங்கரித்தாலும், மதுரைத் தமிழும் இதில் உண்டு. ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைக் கதைக்கேற்றாற்போல், அளவாகப் பயன்படுத்தி கதையை தொய்வில்லாமல் நகர்த்தியிருப்பது நூலாசிரியரின் திறமைக்குச் சான்று.
நன்றி: தினமணி, 12/7/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031421_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818