நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்
நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் , தொகுப்பாசிரியர்: தேவி நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம்,பக். 288, விலை ரூ.180.
தமிழில் குழந்தை இலக்கியத்தை ஓர் இயக்கமாக வளர்த்த “குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டை- நினைவைப் போற்றும் வகையில் வெளிவந்திருக்கிறது இத்தொகுப்பு.
அழ.வள்ளியப்பாவுடன் பழகியவர்கள், நண்பர்கள் என நூறு பேரிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்து, கவிதை, கட்டுரை, கருத்துரை, புதிய கட்டுரைகள் ஆகியவை நான்கு பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சௌந்தரா கைலாசம், சுப.வீரபாண்டியன், குழ.கதிரேசன், பூவண்ணன், அய்க்கண், திருப்பூர் கிருஷ்ணன், இனியவன், பொன்னடியான், இளையவன் முதலிய நூறு பேருடைய அனுபவப் பதிவுகள் இத்தொகுப்பை அற்புதமாக அலங்கரிக்கின்றன.
இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது குழந்தைக் கவிஞரின் மீதான மதிப்பும், மரியாதையும், அபிமானமும் கூடுகின்றன. பாடல், கவிதை, கதை, நாடகம் எனப் பல்வேறு வகையில் சிறார் இலக்கியங்களைப் படைத்தளித்து சிறார் இலக்கியத்துக்கு உயிரோட்டம் தந்தவர் அழ.வள்ளியப்பா. குழந்தைகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர்.
அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு தொடக்கத்தில், இத்தகையதொரு தொகுப்பை அவரின் மகளே வெளிக்கொணர்ந்திருப்பது நூலின் தனிச்சிறப்பு.
நன்றி: தினமணி, 20/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000003228_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818