ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்
ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.140.
ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன.
ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் பண்பு; குரங்கிலிருந்து தான் மனிதப் பிறப்பு உருவானது என்பதை மறுக்கும் குரங்கு எல்லா தீய குணங்களுக்கும்
மனிதன் தான் காரணம். எனவே, நம் இனத்தில் இருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை போன்ற குறுங்கதைகள் வாழ்வுக்கு வழிகாட்டுவன.
– ராம.குருநாதன்
நன்றி: தினமலர்,19/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031785_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818