ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.140. ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன. ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் […]

Read more

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.140. தத்துவ ஞானி ஓஷோவின் எழுபது தத்துவங்களும், அந்தத் தத்துவங்களை விளக்குவதுபோல் அமைந்த எழுபது சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய முயற்சியாக இருக்கிறதே என்று நூலைப் படிக்கத் தொடங்கினால், டூ- இன்-ஒன் என்பதுபோல இரு நூல்களை வாசித்த அனுபவம் ஏற்படுகிறது. “நாட்டை ஆள்வதற்கு நேருவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று வல்லபபாய் படேல் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்க, “பதவி ஆசையே இல்லாதவன் நேரு ஒருவன்தான். அந்த ஒரு தகுதி போதும்’ […]

Read more