தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 786, விலை 800ரூ. தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன. பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் […]

Read more

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள்

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.300. எம்.எல்.பிள்ளை, பூசைப்பிள்ளை, தமிழ்க்காசு என்ற பெயரிலும் போற்றப்பட்டவர் கா.சு.கா., காசு பிள்ளை என்ற கா.சுப்பிரமணிய பிள்ளை; அவரது கடைசி காலத்தில், ‘காசில்லாத காசு’ என்ற கேலிக்கும் உள்ளானவர். சைவம், சட்டம், இலக்கியம் என்ற அறிவுத் துறைகளில் காலம் முழுதும் இயங்கி வந்தார். இவரது ஆய்வு முறையை மூல முறை, ஒப்பீட்டு முறை, தருக்க முறை என பகுப்பார் பேராசிரியர் கருவை பழனிசாமி. தமிழுக்குப் பெருமை தேடியவர்; அதன் மேன்மையை நிறுவியவர்; தன்னலங்கருதாது உழைத்தவர். […]

Read more

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை), சு.சண்முகசுந்தரம், காவ்யா,  பக்.1550, விலை ரூ.1600 தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500 அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால். மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது. மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் […]

Read more