மருதநாயகம்
மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500
அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால்.
மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது.
மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைதரும் வகையில் அமைந்துள்ளது. வரலாற்றை, வரலாற்றுப் பார்வையுடன் தரவுகளுடன் தரும் வாழ்க்கை வரலாற்று நுால்.
– முகிலை ராசபாண்டியன்.
நன்றி: தினமலர், 6/9/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026200_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818