பல கோணங்களில் பசும்பொன் தேவர்
பல கோணங்களில் பசும்பொன் தேவர் (கட்டுரைகள்), தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.260.
சாதித் தலைவரைப் போலவும் மதத் தலைவரைப் போலவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்தும் இன்றைய காலகட்டத்தில், அந்த கண்ணோட்டத்தை மறுக்கும்விதமாக வெளிவந்திருக்கிற இந்த நூல், தேவரின் ஆளுமையைப் பற்றிய எண்ணற்ற சித்திரங்களைக் கட்டுரைகளாகத் தருகிறது.
சாதி வட்டத்துக்கு அப்பாற்பட்டவராகப் பசும்பொன் தேவர் திகழ்ந்தது பற்றியும் அவருடைய பல செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றியும் மகரிஷி சுத்தானந்த பாரதியார் தொடங்கி, மா. இராசமாணிக்கனார் வரை 56 பேரின் சிந்தனைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
“வறட்டு அரசியல்வாதிகளிடையே ஆன்மிக அரசியல் நடத்திய அவர் பாதை புதியது, பெரியது, பரந்தது’ என்கிறார் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி. குலக்கல்வித் திட்டம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் தேவரின் நிலைப்பாடு, அரசியலில், ஆன்மிகத்தில் அவருடைய அடுத்தடுத்த கட்டங்கள் என அனைத்தும் வெவ்வேறு கட்டுரைகளில் பலருடைய பார்வையில் இடம் பெற்றிருக்கின்றன.
பல்வேறு இதழ்கள், மலர்களில் வந்த இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக படிக்கும்போது, தேவரைப் பற்றிய நிறைவான சித்திரம் விரிகிறது.
சாதி, மதத் துவேஷங்களெல்லாம் அரசியலாக மாற்றப்படும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய ஆளுமைகளைப் பற்றி முழுவதுமான – உண்மையான தகவல்களை மக்களை அறியச் செய்வதில் இதுபோன்ற நூல்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது.
நன்றி: தினமணி, 13/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000024472_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818