ஆத்திச்சூடி கதைகள்

ஆத்திச்சூடி கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலைரூ.200. உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என முடியும் 109 அடிகளை உடைய ஆத்திச்சூடிக்கு, அழகிய பொருத்தமான கதைகள் மூலம் விளக்கமளிக்கும் ஆத்திச்சூடி கதைகள் ஓர் அரிய ஆவணம் என்றால் மிகையல்ல. உலகியல் சார்ந்த செய்திகளைப் பொருத்தப்பாட்டுடன் இணைத்து, ஆத்திச்சூடி ஒவ்வொன்றுக்கும் அழகிய ஓவியங்களால் விளக்கமளிக்கும் நுாலாசிரியரின் உழைப்பு போற்றுதற்குரியது. சிறுவர் முதல் பெரியவர் வரை, யாவரும் படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 150ரூ. பகவத் கீதை பிறந்த கதை, அதன் தனிச்சிறப்பு, 18 அத்தியாயங்களில் உள்ள அனைத்து வரிகளுக்கும் எளிய தமிழில் விளக்கம் ஆகியவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006395_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆத்திசூடிக் கதைகள்

ஆத்திசூடிக் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.200. ஒளவையாரின் ஆத்தி சூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களுக்கு சின்னஞ் சிறு கதைகள் மூலம் நீதி போதிக்கும் சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் ஆத்திசூடியின் கருத்துகளோடு, பல்வேறு கதை மாந்தர்களையும், விலங்குகளையும் வைத்து எளிய நடையில் கதைகள் புனையப்பட்டுள்ளன. இவை படிக்க சுவையாக இருப்பதுடன், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன. “ஊக்கமது கைவிடேல்’ என்பதற்கு சிலந்தியின் விடாமுயற்சியைக் கண்டு ஊக்கம் பெற்ற ராபர்ட் புரூஸின் வாழ்க்கைச் சம்பவம் ஓர் உதாரணம். “நேரிலும் பார்க்காத… நல்லதும் அல்லாத, யாருக்கும் ஒரு […]

Read more