ஆத்திச்சூடி கதைகள்
ஆத்திச்சூடி கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலைரூ.200.
உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என முடியும் 109 அடிகளை உடைய ஆத்திச்சூடிக்கு, அழகிய பொருத்தமான கதைகள் மூலம் விளக்கமளிக்கும் ஆத்திச்சூடி கதைகள் ஓர் அரிய ஆவணம் என்றால் மிகையல்ல.
உலகியல் சார்ந்த செய்திகளைப் பொருத்தப்பாட்டுடன் இணைத்து, ஆத்திச்சூடி ஒவ்வொன்றுக்கும் அழகிய ஓவியங்களால் விளக்கமளிக்கும் நுாலாசிரியரின் உழைப்பு போற்றுதற்குரியது. சிறுவர் முதல் பெரியவர் வரை, யாவரும் படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய பயனுள்ள நுால் இது.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 15/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818