ஆயிரம் காந்திகள்
ஆயிரம் காந்திகள் , சுனில் கிருஷ்ணன், நன்னூல் பதிப்பகம்,பக்.148, விலை ரூ.120;
காந்தியின் மறைவுக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளும் அழிந்துவிடும் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் எதிர்காலத்திலும் காந்தியம் நிலைத்து நிற்கும் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
சுந்தர்லால் பகுகுணா, ஜே.சி.குமரப்பா, பேக்கர், பாபா ஆம்தே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆளுமைகள் பெரும் சோதனை, மனப்போராட்டங்களுக்கு இடையே காந்தியடிகள் வலியுறுத்திய சத்தியம், அகிம்சைகளை எவ்வாறு கைக்கொண்டனர் என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் இந்நூல் விளக்குகிறது.
நிலையான பொருளாதாரச் சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க முடியாது. சீர்கெட்ட பொருளாதாரம் லாபத்தை மட்டுமே குறிவைத்து, வன்முறையை ஊக்குவித்து இயற்கையை அழிக்கும் என்ற ஜே.சி.குமரப்பாவின் கூற்று இன்றைக்கும் பொருந்துவதாய் உள்ளது.
கட்டடக் கலையிலும் காந்தியக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க இயலும். இயற்கைக்கு உகந்ததாகவும், சிக்கனமாகவும், அதேநேரத்தில் தரமானதாகவும் கட்டுமானங்களை நிறுவமுடியும் என்பதற்கு பேக்கர் உதாரணமாக இருக்கிறார்.
பெண் கல்வி, மது ஒழிப்பு, தீண்டாமை, சத்தியாக்கிரகம், அகிம்சை, உண்ணாவிரதம், கிராமப் பொருளாதாரம், தற்சார்பு உள்ளிட்ட காந்தியத்தின் கூறுகள் பூமிக்குள் விதை போல பதிந்துள்ளன.
உலகம் உள்ளவரையிலும் காந்தியமும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதே இந்நூலின் சாராம்சம்.
நன்றி: தினமணி, 7/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032943_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818