பட்டா? பத்திரம்? அனுபவம்?

பட்டா? பத்திரம்? அனுபவம்?, அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது. பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது. நிலம் வைத்திருப்போர், நிலம் வாங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய நுால். – பாவெல் நன்றி: தினமலர், 19/11/21. இந்தப் […]

Read more

பதிவு சட்டம்

பதிவு சட்டம், அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், பக். 98, விலை 100ரூ. நடைமுறையில் பதிவு செய்ய வேண்டியவை பல. அவற்றுக்கான சட்ட விதிகளையும், பதிவுத்துறையின் அமைப்பையும் விளக்கும் நூல். நிலம் வாங்கும் போது பதிவு செய்கிறோம். பிறப்பு, இறப்பு, திருமணத்தையும் பதிவு செய்கிறோம். இவை எல்லாம் கட்டாயமானவை. அனைவரும் சட்டப்படி செயல்படுகிறோம். அதற்கு, அடிப்படை அறிவு தேவை. அதை நிறைவு செய்கிறது இந்த நூல். மிக எளிமையான பதிவு சட்டம் தொடர்பான விபரங்களை சொல்கிறது. கேள்வி பதில் பாணியிலும், சிறு குறிப்புகளாகவும், முழு சட்ட […]

Read more