கே.பாலசந்தர் வேலை டிராமா சினிமா

கே.பாலசந்தர் – வேலை, டிராமா, சினிமா – 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு ,சோம.வள்ளியப்பன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.152, விலை ரூ. 115. நாடகத்துறையிலிருந்து திரைத்துறையில் நுழைந்து நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்து, திரைத்துறைக்கென இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான “தாதா சாஹேப் பால்கே’ விருதினைப் பெற்று தமிழ்ப்பட உலகில் தனித்த மரியாதைக்குரிய இயக்குநராகத் திகழ்ந்தவர் மறைந்த கே.பாலசந்தர். அவரது பிறப்பு, குடும்பச் சூழல், பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, பக்கத்து கிராமத்தில் ஆசிரியர் பணி, சென்னையில் ஒரு […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 168, விலை 125ரூ. தெரசாவின் தாயகம் அல்பேனியா. இருப்பினும் அவர், 1948ம் ஆண்டிலேயே இந்தியப் பிரஜை ஆகி விட்டார். தெரசாவும் ஒருமுறை, ‘ரத்த சம்பந்தத்தால் நான் அல்பேனியன். மதநம்பிக்கையில் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி. மற்றபடி எப்போதும் நான் இந்தியப் பெண்மணி’ என்று கூறியிருக்கிறார். மற்ற இளம்பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பருவத் தொல்லைகள் எதனையும் தெரசா அனுபவித்ததில்லை. அது, இயற்கை அவருக்குத் தந்த கொடை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, துறவறம் பூண்டு ஏழை, எளிய […]

Read more

ஒற்றை மார்பு

ஒற்றை மார்பு, எஸ்.கே. முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 216, விலை 175ரூ. அமானுஷ்யம், நாட்டுப்புறக் கதை, காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று பல்சுவைக் கதைகள், இந்தத் தொகுப்பில் உள்ளன. சிறப்பாக முதலிடம் பெறும் கதை, ‘ஒற்றை மார்பு!’ மார்பகப் புற்றுநோயால், ஒரு மார்பை இழந்த கதாநாயகி, வாழ்க்கையைப் புத்துணர்ச்சி உள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக, ஒரு ஏழை மாணவியிடம் அன்பு காட்ட துவங்குவதை உருக்கமாகச் சொல்கிறார் கதாசிரியர். முதல் கதையான, ‘சிவப்பு ராத்திரிகள்’ ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற உற்சாகத்தைத் தருகிறது. […]

Read more

மதுரை அரசியல்

மதுரை அரசியல்,  ப. திருமலை, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,  பக்.336, விலை ரூ.250. மதுரையைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் ராணி மங்கம்மாளையும், காந்தியின் அரை ஆடைக்கான வரலாற்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலில் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், தன் கண் முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களை அற்புதமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கொலை, கூலிப்படை கலாசாரம் தொடர்பாக எழுதும்போது அவர்களுடைய சங்கேத வார்த்தைகளைக் கூட எழுதியிருக்கிறார். மதுரை ஆலயப் பிரவேசம், கக்கன் வரலாறு குறித்த பதிவுகள் அருமை. மௌலானா […]

Read more

மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ. பாயும் மது; பதுங்கும் அரசு சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை […]

Read more

இந்தியத் தேர்தல் வரலாறு

இந்தியத் தேர்தல் வரலாறு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 650ரூ. சுதந்திர இந்தியாவில் 2014 வரை நடந்த பொது தேர்தல்கள், தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களைப் பற்றிக் கூறும் நூலாகத் தோற்றமளிக்கும் இந்நூல், உண்மையில் இந்தியாவின் சமகால வரலாறு. ஒவ்வொரு தேர்தலின்போதும் முன் எழுந்த பிரச்னைகள், ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் தேர்தலை, எதிர்கொண்டவிதம் எல்லாம் இந்நூலில் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல,தேர்தலுக்குப் பின்பு நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், முக்கிய திருப்பங்கள், நாட்டில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்கள், அதன் தொடர்ச்சியாக அடுத்த […]

Read more

சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ. இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ. தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை […]

Read more

ப்ளிங்க்

ப்ளிங்க், சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்து கொள்ளும் உத்திகளையும், வேக உணர்திறன் சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியதுதான் என்பதையும் உளவியல் ரீதியாக கற்றத் தருகிறார் நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- குறுந்தொகை மலர்கள், ரமணி பதிப்பகம், விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற குறுந்தொகையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை ப. அனுராதா, […]

Read more

அதே வினாடி

அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

மதுவிலக்கு அரசியலும் வரலாறு

மதுவிலக்கு அரசியலும் வரலாறு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. தமிழ்நாட்டில், 1973ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார். அன்றைய முதல் அமைச்சர் ராஜாஜி. முதல் கட்டமாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை அமல் நடத்தினார். பின்னர் 1948 அக்டோபர் 2ந்தேதியன்று, தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார், அன்றைய முதல் அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுவிலக்கை தொடர்ந்து அமலாக்குவதில் உறுதியோடு இருந்தார். பின்னர் […]

Read more
1 2 3 4