குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ.

இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு செம்மையாக தொகுத்தளித்துள்ளார் நுலாசிரியர் பேராசிரியர். சிவ. விவேகானந்தன். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.  

—-

  எது காமராஜர் ஆட்சி, செ. நல்லசாமி,  செ. நல்லசாமி வெளியீடு, ஈரோடு, விலை 100ரூ. மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழ்க்கையை அமைத்ததுடன், ஆட்சியும் செய்தவர் காமராஜர். இவர் இனம்,, மொழி கடந்து நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இதயங்களையும் வென்றெடுத்த மாமனிதர். அவருடைய ஆட்சி காலத்தில் கல்வி வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, மன்னர்களை உருவாக்கிய மாமனிதர் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை படிப்பதன் மூலம் காமராஜரின் பொற்கால ஆட்சிமுறைகளை தெரிந்து கொள்ளமுடியும். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *