திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது. கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் […]

Read more

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ. இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். […]

Read more