மேடை நமதே
மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ.
சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.
—-
போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ.
மத சார்பின்மை பற்றி புதிய கோணத்தில் ஆராயும் நூல். ஓட்டுக்காக இந்திய அரசியல் தலைவர்கள் அணியும் போலி முகமூடிதான் மதசார்பின்மை என்கிறார், பத்திரிகையாளர் ஆர்.ஆர். ராஜாராம். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.
—-
சமுதாயக் காட்சிகள், கோ. சவுரிராஜலு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 1900ம் ஆண்டுகளில் வாழ்ந்த சமுதாய குடும்பங்களில் நடந்த நிகழ்வுகள் கதையாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. 8/10/2014.